ஐரோப்பாவில் குடியேறும் அகதிகளுக்கு சாதகமான செய்தியை வழங்கியுள்ள நாடு
ஐரோப்பிய நாடுகளில் குடியேற விரும்பும் அகதிகள் மேற்கு ஆபிரிக்க நாடான நைஜரின் வழியாக கடத்தப்படுவதைத் தடை செய்யும் சட்டத்தை, அந்நாட்டின் இராணுவ அரசு திரும்ப பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டில் அகதிகள் தொடர்பாக இயற்றப்பட்ட இந்த சட்டம் திரும்பப் பெறப்படுவதோடு இதன் கீழ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவா்கள் குறித்த குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அவா்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைகளிலிருந்தும் அவர்கள் விடுதலைசெய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தடுக்கும் சட்டம்
கடந்த 2020 ஆம் ஆண்டில் நைஜரின் அரசாங்கத்தை அந்நாட்டு இராணுவம், கைப்பற்றியதிலிருந்து ஐ.நா, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஆபிரிக்க யூனியன் உள்ளிட்ட அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளுக்கு நைஜா் வழியாக அகதிகள் கடத்தப்படுவதைத் தடுக்கும் சட்டத்தை அந்த நாட்டு இராணுவ அரசு திரும்பப் பெற்றுள்ளமையை தொடர்ந்து ஐரோப்பிய யூனியனிக்கும், நைஜருக்கும் இடையிலான தூதரக உறவு பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என குறிப்பிடப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 7 மணி நேரம் முன்

சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த் மனைவிக்கு என்ன ஆச்சு.. கதறி அழும் பொன்னி சீரியல் வைஷ்ணவி.. வைரல் வீடியோ Cineulagam

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri
