ஊழல் தடுப்பு மசோதா மீதான விவாதம் ஒத்திவைக்கப்படுமா..! இறுதி முடிவு தொடர்பில் வெளியான தகவல்
ஊழல் தடுப்பு மசோதா மீதான விவாதம் இன்று (21.06.2023) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாமல் ஒத்திவைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற செயலாளர் குஷானி ரோஹணதீரவிடம் இது குறித்து தென்னிலங்கை ஆங்கில ஊடகம் ஒன்று தொடர்பு கொண்டு வினவிய போது, விவாதம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என கூறியுள்ளார்.

அரசாங்கம் அதன் முடிவு குறித்து உத்தியோகபூர்வமாக எமக்கு அறிவிக்கவில்லை.
எனினும் விவாதம் பிற்போடப்படலாம் என்ற ஊகங்கள் உள்ளன என்றும் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
சட்டமூலம் மீதான விவாதம்
இதேவேளை, சட்டமூலம் மீதான விவாதம் ஒத்திவைக்கப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹா தெரிவித்துள்ளார்.

ஊழல் தடுப்பு மசோதாவில் திருத்தங்களை முன்வைக்க இருந்தோம், ஆனால் இப்போது விவாதம் ஒத்திவைக்கப்படும் என்று கேள்விப்படுகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
குடும்பத்தினரைப் பார்க்காமல் நான்கு ஆண்டுகள்... வெளிநாட்டில் கோர விபத்தில் சிக்கிய ஆசிய இளைஞர் News Lankasri
இதுதான் உங்க குழந்தை இல்லையே.. தங்கமயில் சொன்ன வார்த்தையால் அதிர்ச்சியில் சரவணன்! பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் Cineulagam