மன்னார் மறை மாவட்டத்திற்கு புதிய ஆயர் தெரிவு
மன்னார் மறை மாவட்டத்தின் 4 ஆவது புதிய ஆயராக பேரருட் திரு.அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அடிகளார் தெரிவு செய்யப்பட்டு அருட்பொழிவு செய்யும் நிகழ்வு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வானது இன்று (22) மன்னார் மடு திருத்தலத்தில் நடைபெற்றுள்ளது.
மன்னார் மறை மாவட்டத்தின் தற்போதைய ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் அபிஷேக நிகழ்வு மற்றும் திருப்பலி இடம் பெற்றது.
4 ஆவது ஆயர்
மன்னார் மறை மாவட்டத்தின் 4 ஆவது ஆயராக மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த பேரருட்திரு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அடிகளார் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 14ஆம் திகதி நியமிக்கப்பட்டார்.
பரிசுத்த பாப்பரசரினால் புதிய ஆயருக்கான நியமனம் வழங்கப்பட்டது.அதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை மன்னார் மறை மாவட்டத்தின் தற்போதைய ஆயராக உள்ள மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை விடுத்திருந்தார்.
இந்த நிலையிலே இன்றைய தினம் சனிக்கிழமை(22) காலை 9.30 மணியளவில் மன்னார் மறைமாவட்டத்தின் 4 ஆவது புதிய ஆயராக அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அடிகளார் அருட்பொழிவு செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நிகழ்வில் பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி பிறைன் உடைக்வே ஆண்டகை, கொழும்பு உயர் மறைமாவட்ட பேராயர் மல்கம் காடினல் ரஞ்சித் ஆண்டகை, மற்றும் இலங்கையின் அனைத்து மறைமாவட்ட ஆயர்களும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

