மற்றுமொரு தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதி
உலக சுகாதார நிறுவனம் அவசரகால பயன்பாட்டிற்காக மொடர்னாவின் கோவிட் தடுப்பூசிக்கு அனுமதியளித்துள்ளது. இதனை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தநிலையில் உலக சுகாதார நிறுவனத்தினால் அவசரப்பபயன்பாட்டுக்காக அனுமதியளிக்கப்பட்ட ஐந்தாவது தடுப்பூசி மொடர்னா தடுப்பூசியாக அமைந்துள்ளது.
தடுப்பூசி பகிர்வு திட்டத்திற்கான முக்கிய இடமான இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து தடுப்பூசிகளின் விநியோகம் தடைப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசிகளின் விநியோகத்தை சீர்செய்யும் வகையில் மொர்டனாவுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் உதவி இயக்குநர் மரியாங்கெலா சிமாவோ தெரிவித்தார்.
தொற்றுநோய்களின் நெருக்கடி காரணமாக இந்தியா தடுப்பூசிகளின் ஏற்றுமதியை தடை செய்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் அனுமதியை அடுத்து மொடர்னா அதன் உற்பத்தி வலையமைப்பின் விரிவாக்க திட்டத்தை 3 பில்லியன் குப்பிகள் வரை அதிகரிக்கும் என்று அறிவித்துள்ளது.
ஏற்கனவே கடந்த ஜனவரி மாதத்தில் உலக சுகாதார அமைப்பின் நோய்த்தடுப்பு தொடர்பான நிபுணர்களின் ஆலோசனைக் குழு 18 அகவை மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து அகவையினருக்கும் மொடர்னாவின் தடுப்பூசியை பரிந்துரைத்தது.
இதேவேளை ஜெனீவாவை தளமாகக் கொண்ட சுகாதார அமைப்பு, சீனாவின் சினோஃபார்ம்
மற்றும் சினோவாக் ஆகியவற்றிலிருந்து கோவிட் தடுப்பூசிகளின் விரிவான
பரிசீலிப்பைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகிறது.
இந்த பரிசீலனை அடுத்த வாரத்தில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
