இன்னும் எரிந்து கொண்டிருக்கின்றன..! சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் விமானங்கள் - ஈரான் வெளியிட்ட அறிவிப்பு
அமெரிக்கப் போர் விமானம் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்திய பின்னர், காணாமல்போன விமானியை தனது படைகள் மீட்டதாக அமெரிக்க ஜனாதிபதி கூறிய கூற்றில் உண்மை இல்லை என ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரான் ஒரு போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்திய பின்னர், காணாமல்போன விமானியைத் தனது படைகள் மீட்டதாக ட்ரம்ப் தனது 'ட்ரூத்' கணக்கில் பதிவிட்டுள்ளார்.
தீவிரமடையும் வான்வழி தாக்குதலினால் நடுவானில் சுட்டுவீழ்த்தப்படும் ஏவுகணைகள் - அபுதாபியில் பற்றியெரியும் ஆலை
விமானியை மீட்கும் நடவடிக்கை
இருப்பினும், ஈரானிய இராணுவத்தலைமையகத்தை மேற்கோள் காட்டி, விமானியை மீட்கும் அமெரிக்க நடவடிக்கை தோல்வியடைந்ததாக ஈரானின் அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தெற்கு இஸ்பஹான் பகுதியில் பல அமெரிக்க விமானங்களைத் தங்கள் படைகள் தாக்கி அழித்ததாகவும் ஈரான் கூறியுள்ளது.
ஒரு விமானம், இரண்டு பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு சி-130 இராணுவப் போக்குவரத்து விமானம் ஆகியவை தாக்கப்பட்டதாக ஈரான் கூறியுள்ளது.
விமானத்தின் சிதைவு
அந்த விமானங்கள் இன்னும் எரிந்து கொண்டிருப்பதாகவும்,ஒரு பாலைவனப் பகுதியில் புகைந்துகொண்டிருக்கும் விமானத்தின் சிதைவுகளைக் காட்டும் காணொளியையும் ஈரான் வெளியிட்டுள்ளது.
ஈரானிய சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் தனது சமூக ஊடகத்தில் ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.
தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam