அரசியலில் இருந்து முழுமையாக விலகிய பிரபலம் - களமிறங்கும் புதிய முகம்
தான் அரசியலில் இருந்து முழுமையாக விலகியிருப்பதாகவும், மீண்டும் அரசியலில் ஈடுபடுவதற்கான எந்தவொரு நோக்கமோ அல்லது தேவையோ தனக்கு இல்லை எனவும் முன்னாள் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அவரின் பேஸ்புக் பக்கத்தில் விசேட பதிவொன்றை பதிவிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, விஜேசேகர குடும்பத்தின் மற்றுமொரு உறுப்பினர் மாத்தறை மாவட்டத்திலிருந்து அரசியலில் பிரவேசிக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
களமிறங்கும் புதிய முகம்
அதற்கமைய, கஞ்சன விஜேசேகரவின் சித்தப்பாவின் மகனான அக்போ விஜேசேகர ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக மாத்தறை அரசியலில் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது “முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மெல் இறப்பதற்கு முன்னர், தனக்குப் பின்னர் கஞ்சன விஜேசேகரவுக்கு வாக்களிக்குமாறு கூறியது எனக்கு நினைவிருக்கிறது. கஞ்சன இப்போது அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்கின்றார். எனவே, உங்களால் அந்தப் பொறுப்பை முன்னெடுத்துச் செல்ல முடியும்” என அக்போ விஜேசேகரவுக்கு, ரணில் ஆலோசனை வழங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.