சட்டவிரோத வாகன முறைகேடுடன் தொடர்புடைய ஆலய பூசகர்: விசாரணையில் அம்பலமாகும் தகவல்கள்!
கடந்த முதலாம் திகதி கண்டி- கல்தன்ன பிரதேசத்தில் வைத்து சட்டவிரோத வாகன முறைகேடு தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆலய பூசகரின் ஆலய வாகன தரிப்பிடத்தில் இருந்து மற்றுமொரு வாகனத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கண்டி- கல்தன்ன பிரதேசத்தில் உள்ள ஆலயமொன்றை நடத்தும் பூசகர் ஒருவரின் மகனுக்குச் சொந்தமான போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட சொகுசு ஜீப் வண்டியொன்றை தெல்தெனிய பொலிஸார் கடந்த முதலாம் கைப்பற்றியிருந்தனர்.
இந்நிலையில் இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணையில் சந்தேகத்திற்கிடமான மற்றுமொரு சொகுசு ஜீப்பை தெல்தெனிய பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
போலி இலக்கத் தகடு
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட் விசாரணையில், குளியாபிட்டிய பிரதேசத்தில் அதே இலக்கத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றுமொரு சொகுசு ஜீப் இருப்பது தெரியவந்துள்ளது.

இதன்படி விசாரணை அதிகாரிகளால் அதன் சட்ட உரிமையாளரின் வாக்குமூலங்களைப் பதிவு செய்ததன் பின்னர், கல்தானயில் போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட குறித்த சொகுசு ஜீப், தெல்தெனிய பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பன்னிரெண்டு வாகனங்கள்
டிஃபென்டர் கார்கள் மற்றும் மான்டெரோ ரக ஜீப்கள் நிறுத்தும் என சந்தேகத்திற்கு இடமான வகையில் சுமார் பன்னிரெண்டு வாகனங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், கார்கள் உட்பட ஏராளமான வாகனங்கள் அங்கு காணப்படுவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்னனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri
ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. அதில் யார் ஹீரோவாக நடிக்கிறார் தெரியுமா? Cineulagam
பிரித்தானியாவின் மில்லியனர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி - வெளிநாடுகளில் குடியேறும் செல்வந்தர்கள் News Lankasri
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan