அநுர அரசின் நாடாளுமன்ற உறுப்பினரை பொதுவெளியில் திணறடித்த பெண்
தையிட்டி சட்டவிரோத விகாரை தொடர்பில் கடந்த 20 திகதி,யாருடைய ஆதரவும் இல்லாமல் தன்னிச்சையாக சென்று,புத்த சாசன அமைச்சரை சந்தித்தோம் என காணி உரிமையாளர்களில் ஒருவரான சுகுமாரி சாருஜன் என்ற பெண் தெரிவித்துள்ளார்.
எங்களுக்கு ஒரு சாதகமான பதிலை தந்து நாங்கள் நம்பிக்கையோடு வந்து இரண்டு இரவுகள் கழிந்த நிலையில் அங்கே இன்னுமொரு சட்டவிரோத கட்டிடம் மிகக்கோலகலமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை பிரதேச அபிவிருத்திகுழு கூட்டத்தில் கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்துள்ள அவர் இது தனியொரு 16 காணிக்காரர்களின் பிரச்சினை இல்லை எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இதனை வந்து திட்டமிட்ட ஒரு ஆக்கிரமிப்பாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம், தடுக்க தடுக்க செய்துகொண்டு வருகின்றார்கள். நீங்களும் ஆதரவோ என்ற சந்தேகம் எங்களிற்கு எழுகின்றது என தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது,