ஆப்கானில் அம்பலமான தலிபான்களின் மற்றுமொரு கோர முகம்!
ஆப்கானில் இசையால் இளைஞர்கள் வழி தவறி செல்வதாக தெரிவித்து இசைக்கு பயன்படுத்தப்படும் கருவிகளை எரித்து அழித்துள்ளனர்.
இவ்வாறு இசைக்கருவிகளை பொதுஇடத்தில் தலிபான்கள் எரித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நாள் முதல் தலிபான்கள் அங்குள்ள மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருவதுடன்,கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு கடும் தண்டனைகளையும் வழங்கியுள்ளனர்.
புதிய கட்டுப்பாடு
இந்த நிலையில் தற்போது மற்றுமொரு கட்டுப்பாட்டை விதித்து தமது கொடூர முகத்தை காண்பித்துள்ளனர்.
குறிப்பாக பெண்கள் உயர்கல்வி கற்கக்கூடாது, அவர்கள் தனியே எங்கும் செல்லக்கூடாது, ஆண்கள் நீண்ட தாடி வளர்க்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
அதாவது ஆப்கானில் இசையால் இளைஞர்கள் வழி தவறி செல்வதாக தெரிவித்துள்ள தலிபான்கள் அந்த இசைக்கு பயன்படுத்தப்படும் கருவிகளை எரித்து அழித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |