சீனாவில் மேலுமொரு தூதரகம் : இலங்கை அரசு வெளியிட்ட தகவல்
சீனாவில் மேலுமொரு தூதரகத்தை நிறுவுவதற்கு இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. சீனாவில் இருந்து அதிகளவு வெளிநாட்டுப் பயணிகளை வரவழைக்கும் நோக்கிலேயே இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய 2026 ஆரம்பத்தில் சீனாவின் செங்டு நகரில் மேற்படி கொன்சல் ஜெனரல் அலுவலகம் அமையும் என்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதற்கு
அவர் மேலும் உரையாற்றுகையில், "சீனாவில் சில நகரங்களில் இலங்கையின் கொன்சல் ஜெனரல் அலுவலகங்கள் அமைந்துள்ளன.

இந்நிலையிலேயே புதிய அலுவலகம் அமைகின்றது. அதேபோல் பிரேசிலிலும் கொன்சல் ஜெனரல் அலுவலகம் மீள திறக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதற்கு பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |