ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானில் கடந்த ஞாயிறன்று ஏற்பட்டதை போல நேற்றையதினமும்(2) நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
5.2 ரிக்டர் அளவுகோலில் குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்ட அதே பகுதிகளில் இன்றும் நிலஅதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பயங்கர நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியான குனார் மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11.47 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அடுத்தடுத்தது 6.0, 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
பாகிஸ்தானை ஒட்டிய இப்பகுதியில் வீடுகள் அனைத்தும் மண்ணால் கட்டப்பட்டவை என்பதால் நிலநடுக்கத்தின் தாக்கத்தில் அவை இடிந்து விழுந்தன.
மீட்டுப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,411 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 3,000 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் ஞாயிறு இரவு நிலநடுக்கம் ஏற்பட்ட அதே குனார் பகுதியை மாலை மீண்டும் நிலநடுக்கம் தாக்கியுள்ளது.
இந்த புதிய நிலநடுகத்தால் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri