ஐரோப்பாவில் வேகமாக பரவும் மற்றுமொரு ஆபத்தான வைரஸ் - மக்களுக்கு எச்சரிக்கை
ஐரோப்பிய நாடுகளில் ஆபத்தான மற்றுமொரு கொரோனா மாறுபாடு பரவி வருவதனால் உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒமிக்ரோன் வைரஸை விட அதன் புதிய துணை திரிபு வைரஸான BA2 மிகவும் ஆபத்து வாய்ந்தது என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
இந்த BA 2 வைரஸ் ஆனது ஓமிகிரேனை விட வேகமாக பரவும் ஆற்றல் கொண்டது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக இந்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகின்றது. இந்த நிலையில் கொரோன வைரஸ் தனது உருவத்தையும், செயல்திறனையும் மாற்றி மாற்றி உலக மக்களை மீண்டும் அச்சுறுத்தி வருகின்றது.
தற்போது ஒமிக்ரோன் என்ற கொரோனா வைரஸின் புதிய திரிபான BA2 என்ற வைரஸ் பரவ தொடக்கி உள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஒமிக்ரோன் வைரஸிடம் இருந்து புதிய திரிபுகளாக BA1,BA2 மற்றும் BA3 தோன்றி உள்ளதாகவும், அதில் BA2 உருமாற்றம் விரைவாகப் பரவுகிறது என்றும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்த புதிய திரிபு பிரித்தானியா, டென்மார்க், ஸ்வீடன், நோர்வே ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை இந்த புதிய திரிபு 40 நாடுகளில் கண்டறியப்பட்டு இருப்பதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த புதிய பிஏ2 ஒமிக்ரானை விட அதிக பாதிப்பு ஏற்படுத்தும் வலிமை பெற்றது எனவும், இது தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை அதிகம் பாதிக்கும் எனவும் உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.
மூன்றாவது அலையே இன்னும் முடிவடையாத நிலையில் நான்காவது அலையை இந்த BA2 வைரஸானது கொண்டுவரலாம் என எதிர்பார்ப்பதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

அமெரிக்காவில் திருட்டு சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிய இந்திய பெண்: வெளியான வீடியோ காட்சி! News Lankasri
