நாட்டு மக்கள் எதிர்நோக்கவுள்ள மற்றுமொரு நெருக்கடி
நாட்டின் சில பகுதிகளில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக கடும் குடி நீருக்கான தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக நீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உதவி பொது முகாமையாளர் ஏக்கநாயக்க வீரசிங்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி நீரை பயன்படுத்துமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நுகர்வோரின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் கடுமையான நிதி சிக்கல்களை எதிர்கொள்வதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை அண்மையில் அறிவித்திருந்தது.
கோவிட் தொற்று காலப்பகுதியில் வழங்கப்பட்ட கால அவகாசமே நீர் கட்டணக் கொடுப்பனவுகளின் போது நிலுவைத் தொகையாகவுள்ள 5.1 பில்லியன் ரூபாவை நுகர்வோரிடமிருந்து இன்னும் வசூலிக்கப்படாத நிலை, ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த நிலுவைத் தொகையில், உள்நாட்டு நுகர்வோர் சுமார் 3700 மில்லியன் ரூபாவும்,மருத்துவமனைகள், அரச அலுவலகங்கள், இராணுவ முகாம்கள் மற்றும் பொலிஸ் நிலையங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் 265 மில்லியன் ரூபாவையும் செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 700 மில்லியன் ரூபாவை வர்த்தக மற்றும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என்றும் கூறப்படுகின்றது.
நிலுவைத் தொகையை செலுத்தத் தவறினால், எதிர்காலத்தில் நீர் விநியோகத்தில் இடையூறுகள் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 18 மணி நேரம் முன்
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு; விவாகரத்துக்கு காரணமே இதுதான் - குற்றச்சாட்டுகளை அடுக்கிய சங்கீதா News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam