முல்லைத்தீவில் மேலுமொரு கோவிட் மரணம் பதிவு
முல்லைத்தீவு - மணற்குடியிருப்பினைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் காச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் கோவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
முல்லைத்தீவு, மணற்குடியிருப்பினை சேர்ந்த 92 அகவையுடைய வயோதிப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உறவினர்களால் இவரது உயிரிழப்பு தொடர்பில் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் பரிசோதனைக்காக சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு அங்கு பி.சிஆர் பரிசோதனை செய்தபோது அவருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவரது சடலம் மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மின்சார சுடலையில் எரியூட்டுவதற்காக வவுனியா எடுத்துச்செல்லப்படவுள்ளது.
மணற்குடியிருப்பில் இவர் வாழ்ந்த இடம், இவருடன் தொடர்பினை பேணியவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதுடன், அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் பொது சுகாதார பரிசோதகர்கள் ஈடுபட்டுள்ளனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 11 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
