மன்னாரில் மேலுமொரு கோவிட் மரணம் பதிவு
மன்னாரில் இன்று மேலும் ஒரு கோவிட் மரணம் நிகழ்ந்துள்ள நிலையில் மாவட்டத்தில் கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் இன்று ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மன்னார் மூர்வீதி பகுதியை சேர்ந்த 63 வயதுடைய வயோதிபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த வயோதிபர் கோவிட் தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் மாவட்டத்தில் கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.
இறுதியாக உயிரிழந்த 3 வயோதிபர்களும் எவ்வித கோவிட் தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.
மேலும் மாவட்டத்தில் இம்மாதம் தற்போது வரை 246 கோவிட் தொற்றாளர்களும்,இவ்வருடம் 1270 தொற்றாளர்களும், மாவட்டத்தில் இது வரை 1287 கோவிட் தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan
