ரணிலுக்கு மீண்டும் சந்தர்ப்பம்: பிரசன்ன ரணதுங்க வலியுறுத்து
பொருளாதாரத்தை மீட்டெடுத்து நாட்டை ஸ்திரப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இன்னொரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாடு எதிர்நோக்கும் பொருளாதார வீழ்ச்சியை தீர்ப்பதற்கு தற்போதைய ஜனாதிபதியே பொருத்தமானவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கம்பஹா மற்றும் மினுவாங்கொடையில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர்
நாடு விருப்பங்களை முன்னுரிமைக் கொடுக்கும் சூழ்நிலையில் இல்லை என்று கூறிய அமைச்சர், அவ்வாறு செய்வதற்கான எந்தவொரு முயற்சியும் நாட்டை ஆழமான சிக்கலில் ஆழ்த்தும் என்றும் கூறியுள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர்கள் இன்று தலைவிரித்தாடுகின்றனர். பல்வேறு வகையான வேட்பாளர்கள் உள்ளனர். யார் வேண்டுமானாலும் பெருமை பேசலாம். ஆனால், அனைவராலும் செயல்பட முடியாது. பொருளாதார நெருக்கடியை தீர்க்கவும், ஆட்சி அமைக்கவும் குறைந்த கால அவகாசமே உள்ளது. எனவே இது சோதனைக்கான நேரம் அல்ல என்றும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்துவதற்கு தீர்மானிக்கவில்லை என தெரிவித்த அவர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் என தனிப்பட்ட முறையில் தாம் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு
தேசியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக மக்கள் கடந்த காலங்களில் ஜனாதிபதிகளைத் தேர்ந்தெடுத்தனர். போரை இல்லாதொழிக்க. 2004 இல் மஹிந்த ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டார்.
2015 இல் மைத்திரிபால சிறிசேன நல்லாட்சிக்காக தெரிவு செய்யப்பட்டார். 2019 இல் கோட்டாபய ராஜபக்சவும் தேசியப் பாதுகாப்பை நிலைநாட்டுவதற்காகத் தெரிவு செய்யப்பட்டார்.
அந்த வகையில் இன்று நமக்குத் தேவை நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்காக ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும் என்று பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 22 மணி நேரம் முன்

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam
