கணேமுல்ல சஞ்சீவ கொலையாளிகள் தொடர்பில் வெளியாகிய காணொளி
கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பின்னணியில் இருந்ததாகக் கருதப்படும் இஷாரா என்ற பெண், நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல முயற்சிப்பதாக புலனாய்வு அமைப்புகள் தெரிவிக்கின்றன.
திட்டமிட்ட குற்றக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பின்னணியில் இருந்தவர் நீர்கொழும்பு, கட்டுவெல்லேகம, ஜெயா மாவத்தையைச் சேர்ந்த 25 வயதான பின்புர தேவகே இஷாரா செவ்வந்தி என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமை புதுக்கடை நீதிமன்றத்தில் வைத்து, கணேமுல்ல சஞ்சீவ மீது இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதலுக்கு துப்பாக்கியை வழங்கியவர் குறித்த பெண் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு கொலை நடந்த நாளில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
எனினும் கொலை நடந்து ஐந்து நாட்கள் கடந்தும், இதுவரை மூளையாக இருந்தவர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் இஷாரா தொடர்பிலான மற்றுமொரு சிசிரிவி தற்போது வெளியாகியுள்ளது...

கெஹெல்பத்தர பத்மேவின் நண்பர் மீது துப்பாக்கிச் சூடு! மினுவாங்கொடை சம்பவம் தொடர்பில் வெளிவரும் தகவல்கள்

5 நாள் முடிவில் வெற்றிப்பெற்றுள்ள டிராகன் திரைப்படம் செய்த வசூல்... தமிழகத்தில் மட்டுமே இவ்வளவா? Cineulagam
