படகுடன் மீட்கப்பட்ட ரோகிங்கியர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல்
இலங்கை கடற்பரப்பில் தத்தளித்து காப்பாற்றப்பட்ட 105 ரோகிங்கியர்களும் மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் காங்கேசன்துறை கடற்படை முகாமில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் நேற்றிரவு சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதன்போது அனைவருக்கும் தோல் ஒவ்வாமை நோய் ஏற்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர்களுக்குச் சிகிச்சையளிக்கும் நோக்கில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேநேரம் குறித்த படகில் 104 பேர் பயணித்தனர் என்று ஏற்கனவே செய்திகள்
வெளிவந்தபோதும் இவர்கள் பயணித்த படகை எடுத்து வரும் முயற்சியில்
கடற்படையினருடன் பணியில் இருந்த ரோகிங்கியர் நேற்று மாலையே கரை திரும்பியதால்
அவரது எண்ணிக்கை தவறவிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 1 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
