பொலிசாரின் கண்ணீர்ப்புகைக்குண்டைத் திருடிய மற்றொருவர் கைது
பொலிஸ் திணைக்களத்துக்குச் சொந்தமான கண்ணீர்ப் புகைக்குண்டொன்றைத் திருடிச் சென்ற குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 13ம் திகதி சமூக வலைத்தள செயற்பாட்டாளர் பெதும் கர்னர் தலைமையிலான குழுவொன்று நாடாளுமன்றத்தைக் கைப்பற்றுவதற்கான வன்முறையில் இறங்கியிருந்தது.
திருடிச் செல்லப்பட்ட கண்ணீர்ப் புகைக்குண்டு
குறித்த சம்பவத்தின் போது போராட்டக்காரர்களை கலைந்து போகச் செய்வதற்காக அவர்கள் மீது பிரயோகம் செய்வதற்காக பொலிசார் எடுத்து வந்த கண்ணீர்ப் புகைக்குண்டுகள் பொல்தூவ சந்தியில் வைத்து போராட்டக்காரர்களினால் திருடிச் செல்லப்பட்டிருந்தது.
இந்நிலையில் சம்பவம் குறித்து ஏற்கெனவே நான்கு பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று பத்தரமுல்லைப் பிரதேசத்தில் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை கடுவலை மாஜிஸ்திரேட் நீதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு அழைத்துப் போய் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்