மின்சார சபையின் கவனயீனத்தால் ஒருவர் பலி
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் கிரான்குளம் விஷ்னு ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த இடத்தில் இன்று(02.04.2025) காலை கார் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்து மின் கம்பத்தில் மோதியிருந்தது.
தடைப்பட்ட மின்சாரம்
அதில் காரைச் செலுத்தி வந்த சாரதி தெய்வாதீனமாக உயிர் பிழைத்துள்ளதுடன், கார் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது.
மின்கம்பத்தில் கார் மோதியதால் மின்கம்பிகள் அறுந்த நிலையில் அப்பகுதியில் மின்சாரமும் தடைப்பட்டிருந்தது.
இவ்வாறிருக்க, ஸ்தலத்திற்கு விரைந்த மின்சாரசபை ஊழியர்கள், தடைப்பட்டிருந்த மின்சாரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவேளை, மோட்டார் சைக்கிளில் தனது மகனுடன் சென்ற ஒருவர் குறுக்கே இருந்த மின்சாரக் கம்பியில் சிக்குண்டுள்ளார். இதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழைந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
எனினும், அவருடன் பயணித்த மகன் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே அதே இடத்தில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் குறித்த மின் கம்பிகள் அறுந்திருந்தாலும் மின்சார பழுதுபார்க்கும் வேலைகள் நடைபெறுகின்றன என்பது தொடர்பாக சமிக்ஞை ஏதுமின்றி மிச்சார சபை ஊழியர்கள் செயற்பட்டதன் காரமாகவே இந்த விபத்துச் சம்பவம் மீண்டும் அதே இடத்தில் இடம்பெற்றதாக அங்குள்ள பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இந்நிலையில், ஸ்தலத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 8 நிமிடங்கள் முன்

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam
