மன்னாரில் மேலும் 15 பேருக்கு கோவிட் தொற்று உறுதி

corona virus mannar covid 19
By Ashik Jun 17, 2021 11:02 AM GMT
Report

 மன்னாரில் ஆடைத் தொழிற்சாலையில் கடமைற்றுகின்ற 10 நபர்கள் உற்பட 15 நபர்களுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 572 ஆக அதிகரித்துள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று வியாழக்கிழமை (17) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் மற்றும் அன்ரிஜன் பரிசோதனை முடிவுகளின் படி நேற்றைய தினம் புதன் கிழமை (16) மேலும் 15 நபர்கள் கோவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 5 நபர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளின் போது அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் எமில் நகர், சாந்திபுரம் மற்றும் தாராபுரம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

மேலும் ஆடைத் தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்ட 70 அன்ரிஜன் பரிசோதனைகளில் 10 நபர்களுக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் சின்னக்கடை,சாந்திபுரம்,எமில் நகர்,பேசாலை , விடத்தல் தீவு, பரப்புக்கடந்தான் மற்றும் பண்டிவிருச்சான் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

இவர்களில் 6 பேர் பெண்களாகவும் 4 பேர் ஆண்களாகவும் உள்ளனர். பெண்கள் தாராபுரத்தில் அமைந்துள்ள இடை நிலை சிகிச்சை நிலையத்திற்கும், ஆண்கள் வவுனியா இடை நிலை சிகிச்சை நிலையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

ஜூன் மாதம் தற்போது வரை 65 நபர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 572 நபர்களும் இவ்வருடம் 555 நபர்களும் கோவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தாராபுரத்தில் அமைந்துள்ள இடை நிலை சிகிச்சை நிலையத்தில் இது வரை 311 தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

அவர்களில் 239 நபர்கள் சிகிச்சைகளை நிறைவு செய்து தமது வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். இவர்களில் 45 பேர் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் 44 நபர்கள் சிகிச்சைகளை நிறைவு செய்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் சமூகத்தில் கோவிட் தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள துரித செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம்.

மக்கள் சுகாதார வழி முறைகளை உரிய முறையில் கடை பிடித்து தொற்றிற்கு உள்ளாகாது உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் மருதமடு அன்னையினுடைய ஆடி திருவிழா எதிர் வரும் 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆடி மாதம் 2 ஆம் திகதி திருவிழா திருப்பலியுடன் நிறைவடைய உள்ளது.

இம் முறை அரசினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார விதி முறைகளுக்கு அமைவாக ஒரே நேரத்தில் திருப்பலியில் கலந்து கொள்ள 30 நபர்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படும். ஆடி மாதம் 2 ஆம் திகதி நடை பெறும் திருவிழா திருப்பலி ஒன்றில் ஒரே நேரத்தில் 30 நபர்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படும்.

அவர்களின் பெயர் விபரங்கள் முன் கூட்டியே எமக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். அபாயம் கூடிய பகுதிகளில் இருந்து திருவிழா திருப்பலிகளில் கலந்து கொள்ளுகின்றவர்களுக்கு நாங்கள் அன்ரிஜன் பரிசோதனைகளை மேற்கொள்வோம்.

திருப்பலியின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு ஒரு திருப்பலியில் 30 நபர்கள் மாத்திரம் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். நேற்றைய தினம் புதன் கிழமை (16) மாலை அரசாங்க அதிபர் தலைமையில் இடம் பெற்ற விசேட கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.


மரண அறிவித்தல்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, சூரிச், Switzerland

01 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Aulnay-sous-Bois, France

01 May, 2025
மரண அறிவித்தல்

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

19 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, தெஹிவளை, வெள்ளவத்தை

03 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Edmonton, Canada, Toronto, Canada

05 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரையூர், பருத்தித்துறை

07 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, சிட்னி, Australia

06 May, 2015
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Herdecke, Germany

04 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, ஏழாலை, Harrow, United Kingdom

04 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இறக்குவானை, கந்தர்மடம், யாழ்ப்பாணம்

07 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், கண்டி

28 Apr, 2023
மரண அறிவித்தல்

நல்லூர், London, United Kingdom

30 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, வண்ணாங்குளம்

04 May, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, சொலோதென், Switzerland

03 May, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இலங்கை, கொழும்பு, Geneva, Switzerland

04 May, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US