அனோஜனை மன்னியுங்கள்.! யாழ் சர்வமத பேரவை உருக்கமான கோரிக்கை
சவூதி அரேபிய நீதித்துறையின் கட்டமைப்பை மதிக்கின்ற அதேவேளை அனோஜனை மன்னித்து, அவரும் அவர் போன்றவர்களும் திருந்தி வாழ ஒரு சந்தர்ப்பத்தை வழங்கும்படி கோருகிறோம் என யாழ் மாவட்ட சர்வமத பேரவை வலியுறுத்தியுள்ளது.
யாழ்.மாவட்ட சர்வமத பேரவையின் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணம் நாக விகாரையில் நேற்று(23) இடம்பெற்றபோது கருத்து தெரிவித்த சர்வமத தலைவர்கள் இதனை தெரிவித்தனர்.
மேலும் தெரிவிக்கையில்,
கல்முனை நற்பிட்டிமுனை இளைஞர் சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையைக் குறைத்து கருணை வழங்கும்படி யாழ் மாவட்ட சர்வமத பேரவையின் அறிக்கை வேண்டுகிறது.
இறைவன் மிகுந்த இரக்கமுடையவர் என்பதால் உயிரை காப்பாற்றும்படி மண்டியிடுகிறோம். இஸ்லாமியர், தமது உயிரினும் மேலானவராக கருதும் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி முகநூலில் அவதூறான கருத்தொன்றை பதிவிட்டமை தவறு என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை என்பதை நாம் புரிந்துகொள்கிறோம் என்றனர்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார்..! நாடாளுமன்றத்தில் ஸ்ரீநேசன் எம்.பி. கேள்வி
அனோஜன் விவகாரம்! இலங்கையில் தமிழ் - முஸ்லிம் கலவரம் உருவாகுமென பரப்பப்படும் அச்சம் - உலமா கட்சி ஆதங்கம்
நாங்கள் உயிர்வாழ்வதற்கு ஏன் கடவுள் எங்களைத் தேர்ந்தெடுத்தார்? நேபாளத்தில் தப்பிய தம்பதி உருக்கம் News Lankasri
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri