கொழும்பில் இடம்பெறும் சிலிநெக்ஸ் 2023 வருடாந்த கடற்படை பயிற்சி
இந்திய மற்றும் இலங்கை கடற்படைகள் இணைந்து சிலிநெக்ஸ் 2023 என்ற வருடாந்த கடற்படை பயிற்சியை கொழும்பில் நேற்று (04.04.2023) ஆரம்பித்துள்ளன.
இது ஏப்ரல் 8 வரை நடைபெறும் என்று இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.
இந்த பயிற்சியின்போது இரண்டு நாட்டு கடற்படைகளும் தலா இரண்டு கடற்படை கப்பல்களை பயன்படுத்துகின்றன.
இரு நாடுகளின் சிறப்புப் படை பயிற்சி
அத்துடன் உலங்கு வானூர்திகள் கண்காணிப்பு விமானங்கள் மற்றும் இரு நாடுகளின் சிறப்புப் படைகளும் இந்த பயிற்சியில் பங்கேற்கின்றன.
இரண்டு கடற்படைகளுக்கும் இடையே பலதரப்பட்ட கடல்சார் நடவடிக்கைகளில் இயங்கும் தன்மையை மேம்படுத்துதல், பரஸ்பர புரிதலை மேம்படுத்துதல் மற்றும் சிறந்த நடைமுறைகள், செயல்முறைகளை பரிமாறிக் கொள்வதை இந்த பயிற்சி நோக்கமாகக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகம்
இந்தப் பயிற்சிகள் இரண்டு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன, அவற்றில் முதலாவது கட்டம் கொழும்பு துறைமுகத்தில் ஏப்ரல் 5 ஆம் திகதி வரை நடைபெறும், இரண்டாவது துறைமுகத்துக்கு அப்பால் உள்ள கடலில் ஏப்ரல் 8 வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கூட்டுப் பயிற்சி ஒன்று, இந்தியாவின்
விசாகப்பட்டினத்தில் மார்ச் 7-12 வரை நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
