துறைமுகநகர் முதலீட்டாளர்களிடம் இருந்து 2000 டொலர் வருடாந்தக் கட்டணம் அறவீடு
வருடாந்த கட்டண அறவீடு
கொழும்பு துறைமுக நகர் முதலீட்டாளர்களிடமிருந்து வருடாந்தம் இரண்டாயிரம் அமெரிக்க டொலர்களை கட்டணமாக அறவீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான அனுமதிப் பத்திரம் வழங்குவது குறித்து நிதி அமைச்சரான, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கையொப்பத்தில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆண்டு தோறும் மார்ச் மாதம் 31ம் திகதியுடன் தொடங்கும் 12 மாத கால அனுமதிப் பத்திரம் வழங்கப்பட உள்ளது.
முதலீட்டாளர்களுக்கு நிபந்தனை அடிப்படையில் அனுமதி
அனுமதிப் பத்திரத்திற்காக விண்ணப்பம் செய்யும் முதலீட்டாளர்களுக்கு நிபந்தனை அடிப்படையில் அனுமதி வழங்க கொழும்பு துறைமுக நகர் வர்த்தக ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அனுமதி வழங்கப்படும் முதலீட்டாளர்கள் கொழும்பு துறைமுக நகர் மற்றும் அதற்கு வெளியே வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





























ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri
