திருகோணமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி
திருகோணமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி நேற்று(30) திருகோணமலை இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் சமூக சேவைகள் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்தது.
இதன் போது குண்டு எரிதல், சக்கர நாற்காலி ஓட்டம், ஈட்டி எரிதல், பரிதி வட்டம் எரிதல் என பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தன.
தேசியமட்ட விளையாட்டு விழா
இதில் முதலாமிடம் தெரிவு செய்யப்படுகின்றவர்கள் மார்ச் மாதம் கொழும்பில் இடம் பெறவுள்ள தேசியமட்ட மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு விழாவுக்கு அழைத்துச் செல்லவுள்ளதாக மத்திய அரசாங்கத்தின் சமூக சேவைகள் திணைக்கள மாவட்ட இணைப்பாளர் த.பிரணவன் தெரிவித்தார்.
இந்நிகழ்வை திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் ஆரம்பித்து வைத்துடன் குறித்த போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam
