முட்டை விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு
38 ரூபாவிற்கு வழங்குமாறு வர்த்தக அமைச்சர் உத்தரவிட்டுள்ள முட்டையை சுமார் ஒரு மாதத்தில் 38 ரூபாவிற்கும் குறைவான விலையில் கொள்வனவு செய்யும் சந்தர்ப்பம் நுகர்வோருக்கு கிடைக்குமென அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் ரட்ணசிறி அழககோன் தெரிவித்துள்ளார்.
மாதாந்தம் 600,000 முட்டைகள் உற்பத்தியில் நுகர்வுக்குத் தேவையான முட்டையின் அளவை விட அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முட்டை இறக்குமதி
இந்தியாவில் இருந்து முட்டையை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும், முட்டை இறக்குமதிக்கான செலவை உள்ளூர் முட்டை தொழில் வளர்ச்சிக்கு பயன்படுத்தினால், உள்ளூர் விவசாயி மட்டுமின்றி நுகர்வோரும் பாதுகாக்கப்படுவார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வர்த்தக அமைச்சு இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்து நுகர்வோருக்கு தலா 43 ரூபாய்க்கு விற்பனை செய்ததாகவும், தற்போது உள்ளூர் முட்டைகளை 42, 43, 44 ரூபாய்க்கு நுகர்வோர் வாங்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri