பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
பேராதனை பல்கலைக்கழகத்தில் கடந்த செப்டெம்பர் 14 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துக்கும், பகிடிவதைக்கும் தொடர்பில்லை என பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் அனுராத விதானகே, இந்த தாக்குதல் சம்பவம் பகிடிவதையுடன் தொடர்புடையது அல்ல என வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் தமக்கு தொடர்பில்லாத போதிலும், பல்கலைக்கழக நிர்வாகம் இந்த, பிரச்சினையில் தம்மை தொடர்புபடுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஏனைய மாணவர்கள் தொடர்ந்தும் தமது, மாணவர் ஒன்றியத்துக்கு அச்சுறுத்தல்
விடுத்து வருவதாகத் தெரிவித்த அவர், இவ்வாறான செயற்பாடுகளுக்கு பல்கலைக்கழக
நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மாஸ் வரவேற்பு பெற்றுள்ள டிராகன் படத்திற்காக பிரதீப் வாங்கிய சம்பளம்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
