நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள கடுமையான நடவடிக்கை-செய்திகளின் தொகுப்பு
எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள உடன்படிக்கையின் பிரகாரம், இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீர் கட்டணத்தை செலுத்த தவறிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதற்கமைய குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கான நீர் விநியோகத்தை துண்டிப்பதற்கு
பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதி பொது முகாமையாளர்
குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே நீர் கட்டணத்தை செலுத்தத் தவறிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து நிலுவைத் தொகையை வசூலிப்பது குறித்து பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எழுத்து மூலம் சபாநாயகருக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மாலைநேர செய்திகளின் தொகுப்பு,