கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் ஜெர்மனி செல்வது தொடர்பில் வெளியான தகவல்
கோவிஷீல்டு போட்டுக் கொண்டவர்கள் ஜெர்மனி செல்ல எவ்வித சிரமங்களும் இல்லை என இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் வால்டர் ஜெ லிண்டர் தெரிவித்துள்ளார்.
அவர் நேற்று அளித்துள்ள பேட்டியில் கோவாக்சின் தடுப்பூசி குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உலக சுகாதார அமைப்பு கோவாக்சின் தடுப்பூசிக்கு உரிய அங்கீகாரம் வழங்கியவுடன் ஜெர்மனி அரசு கோவாக்சின் குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஜெர்மனி ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது. இதனால் கோவிஷீல்டு போட்டுக் கொண்டவர்கள் ஜெர்மனி செல்ல எவ்வித சிரமங்களும் இல்லை.
உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்படாத பிற தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டவர்கள் அங்கு சில நாட்கள் குவாரண்டைனில் இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
அவர்கள் கோவிட் நெகட்டிவ் சான்றிதழைக் காண்பித்த பின் ஜெர்மனிக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. குவாரண்டைனில் இருந்தும் விலகிக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri
பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியினருக்கு ஆண் குழந்தைகள் பிறப்பு அதிகம்: சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள விடயம் News Lankasri