கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் ஏற்கும் செயற்பாடு இடைநிறுத்தம்: குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பு
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மீண்டும் நாட்டிலுள்ள பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றை வழங்கியுள்ளது.
அதன்படி கணினி கட்டமைப்பில் மீண்டும் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் செயற்பாடு இன்று தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணினி கட்டமைப்பின் திடீர் செயலிழப்பு காரணமாக அத்தியாவசியமற்ற சேவைகளுக்காக நேற்று குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்கு விஜயம் செய்வதை தவிர்த்து கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.
இந்த திடீர் செயலிழப்பு காரணமாக திணைக்களத்தின் ஒரு நாள் சேவையில் தாமதம் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
எனினும் இந்த கோளாறு சரிசெய்யப்பட்ட நிலையில் வழமையான சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கணினி கட்டமைப்பில் மீண்டும் கோளாறு ஏற்பட்டுள்ளதாக இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி...
குடிவரவு, குடியகல்வு திணைக்களம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
சேவைகள் வழமைக்கு: பொது மக்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 49 நிமிடங்கள் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
