இங்கிலாந்தில் பொது மக்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!
கொரோனா வைரஸின் தென்னாப்பிரிக்க மாறுபாடு அடையாளம் காணப்பட்ட இங்கிலாந்தின் பகுதிகளில் உள்ள மக்கள் அனைத்து சமூக தொடர்புகளையும் குறைப்பது இன்றியமையாதது என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
அந்நாட்டின் சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் இதனை தெரிவித்துள்ளார். டவுனிங் வீதியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,
“இந்த வைரஸுக்கு எதிரான போராட்டம் இன்னும் முடிவடையவில்லை, இந்த மாறுபாடு இன்னும் ஆபத்து கூடியது என்பதற்கு தற்போது எந்த ஆதாரமும் இல்லை.
ஆனாலும் நாங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கொரோனா வைரஸின் தென்னாப்பிரிக்க மாறுபாடுகளுடன் இங்கிலாந்தில் 105 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவற்றில் 11 பேருக்கு ஏற்பட்டுள்ள தொற்று சர்வதேச பயணங்களுடன் தொடர்பு கொண்டதாகத் தெரியவில்லை.
இந்நிலையில், இந்த மாறுபாடு சில பிராந்தியங்களில் பரவக்கூடும் என்ற அச்சம் காரணமாக இங்கிலாந்தின் சில பகுதிகளில் வீட்டு சோதனைகள் மேற்கொள்ளப்படும்.
- லண்டன் - W7(ஈலிங்), N17(Haringey)மற்றும் CR4 (Croydon)
- வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் - WS2 (Walsall)
- இங்கிலாந்தின் கிழக்கு - EN10 (ப்ரோக்ஸ்போர்ன்)
- தென்கிழக்கு - ME15 (மைட்ஸ்டோன்) மற்றும் GU21 (கில்ட்ஃபோர்ட்)
- வட மேற்கு - PR9 (Preston)
இந்த பகுதிகளில் உள்ளவர்கள் அறிகுறிகள் இல்லாவிட்டாலும் வீட்டிலேயே தங்கி, பரிசோதனையை மேற்கொள்வது கட்டாயமானது என மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார்.
அதிலும், குறிப்பாக அஞ்சல் குறியீடு பகுதிகளில் உள்ளவர்கள் கூடுதல் சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அந்த பகுதிகளில் உள்ளவர்கள் அனைத்து சமூக தொடர்புகளையும் குறைத்து, வாய்ப்பு வரும்போது சோதனையைப் மேற்கொள்வது முற்றிலும் கட்டாயமானது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.