பரீட்சைகள் குறித்து பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றை நடத்துவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தினங்களில் இதுவரையில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை.
இது குறித்த கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்படவில்லை என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் பிரணவதாசன் தெரிவித்தார்.
எதிர்வரும் நவம்பரில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள பரீட்சைகள் தொடர்பில் வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், பரீட்சைகளை நடத்துவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட திகதிகளில் இதுவரையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
கல்விப் பொதுத் தராதர சாதாரண மாணவர்களுக்கான செயன்முறை பரீட்சைகளை நடத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டு வருகிறது. எனினும் கல்வி அமைச்சு மட்டத்திலான தீர்மானத்தின் பின்னரே இது குறித்து அறிவிக்கப்படும் என்றார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

4 ஆவது முறையாக தாத்தாவான ரஜினி! சௌந்தர்யா மீண்டும் கர்ப்பம் - உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம் Manithan

கள்ளக்குறிச்சி மாணவி உடலை 3 பெண்கள் தூக்கி செல்லும் சிசிடிவி காட்சி உண்மையா? தாயார் செல்வி விளக்கம் News Lankasri

எதேச்சியாக பார்த்த ஒரு வீடியோவால் கோடீஸ்வரர் ஆன நபர்! எதிர்பாராமல் பணக்காரனாகி விட்டேன் என ஆச்சரியம் News Lankasri
