மீண்டும் அபாய கட்டத்தை அடையுமா நாடு? இராணுவத் தளபதி வெளியிட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் கோவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பதற்கான சாத்தியம் அதிகளவில் இருப்பதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா(Shavendra Silva) தெரிவித்துள்ளார்.
நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் பின்னர் பொதுமக்கள் சிலரின் செயற்பாடுகள் காரணமாக கோவிட் வைரஸ் மீண்டும் அதிகரிக்கலாம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“கோவிட் தொற்றினால் தற்போது 10 முதல் 25 வரையான மரணங்களே நாளொன்றில் பதிவாகி வருகின்றன. 500 முதல் 600 வரையான தொற்றாளர்களே நாளொன்றில் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.
இதேவேளை, கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோர் உடனடியாக தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுமாறும் அவர் கோரிக்கை கோரிக்கை விடுக்கின்றார்.
நீண்ட விடுமுறை காலப் பகுதிகளில் சிலர், சுற்றுலா பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர், அதனூடாக கோவிட் தொற்று பரவும் அபாயம் காணப்படுகிறது.
இலங்கையர்கள் மிகவும் பொறுப்புடன் நடந்துக்கொள்ளும் பட்சத்தில், கோவிட் தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.
