அரசின் தடைக்கு எதிராக ஜே.வி.பி. போர்க்கொடி! அறிவிக்கப்பட்டுள்ள முடிவு
திட்டமிட்டபடி இந்த ஆண்டும் மே தினப் பேரணியை நடத்தவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே ஜே.வி.பி.யின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க இந்த முடிவை உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
புத்தாண்டுக் கொண்டாட்டங்கள், பேரணிகள், ஒன்றுகூடல்கள் எனக் கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற நிகழ்வுகளில் சுகாதார வழிகாட்டுதல்களைப் பற்றி கவனம் செலுத்தாத அரசு, மே தினப் பேரணிகளை நடத்துவதற்கு தடை விதித்துள்ளமைக்கு பின்னால் ஒரு அரசியல் நோக்கம் உள்ளது என்பது தெளிவாகின்றது.
தனது அரசியல் நோக்கத்துக்காக அரசு மே தினப் பேரணிகளை நிறுத்தி வைக்க முடிவெடுத்தாலும், அந்த முடிவுக்கு ஜே.வி.பி. கட்டுப்படாது.
அந்த அடிப்படையில், மே தினப் பேரணியை நடத்துவதற்கு ஜே.வி.பி. அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
