தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு
தியாக தீபம் அன்னை பூபதியின் 38வது நினைவேந்தல் பருத்தித்துறையில் இன்றைய தினம் (19.04.2026) காலை 10:30 மணியளவில் ஜனநாயக போராளிகள் கட்சியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ஜெயாநந்தம் ஜெயகோபி தலைமையில் ஜனநாயக போராளிகள் கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதில் முதல் நிகழ்வாக தியாக தீபம் அன்னை பூபதி அம்மாவின் திரு உருவ படத்திற்கான பொது ஈகை சுடரினை ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன் ஏற்றிவைத்து மலர் மாலையினையும் அணிவித்தார்.
தொடர்ந்து மலர் அஞ்சலியினை பால சதீஸ்வர குருக்கள் ஆரம்பித்து வைக்க நிகர்வில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் மலர் அஞ்சலி செலுத்தினர்.
அதனை தொடர்ந்து அக வணக்கம் செலுத்தப்பட்டது நினைவுரையினை ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் நிகழ்த்தினார்.
இதில் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்கள், ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
செய்தி - எரிமலை
கிளிநொச்சி
அன்னை பூபதியின் 38வது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று (19.02.2026) கிளிநொச்சி சேவை சந்தைக்கு முன்பாக நடைபெற்றது.
குறித்த நிகழ்வு தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் சிறப்புற இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் வர்த்தகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் முன்னாள் போராளிகள் என பலரும் கலந்துகொண்டு தமது உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.


செய்தி - தேவானந்தன்
முல்லைத்தீவு
இந்திய இராணுவத்தின் அடக்குமுறைக்கு எதிராக 31 நாட்கள் சாகும் வரை உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த தியாகத்தாய் அன்னை பூபதியின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (19.04.2026) முல்லைத்தீவு - கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனது மக்கள் தொடர்பகத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.
அந்தவகையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வில், அன்னை பூபதியின் திருவுருவப் படத்திற்கு சுடரேற்றப்பட்டதுடன், மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி உணர்வெழுச்சியுடன் அஞ்சலி மேற்கொள்ளப்பட்டது.
குறித்த அஞ்சலி நிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் மகாதேவா குணசிங்கராசா, சமூகசெயற்பாட்டாளர் கிருஸ்ணபிள்ளை சிவகுரு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



செய்தி - தீசன்
கிளிநொச்சி
மலரும் புதுயுகம் அமையத்தின் ஏற்பாட்டில் தியாகி அன்னை பூபதி நினைவு நாள் நிகழ்வும் அன்னை பூபதி நினைவு நாளை முன்னிட்டு அறநெறி மாணவர்களிடையே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி ஈட்டியவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் இன்று நடைபெற்றுள்ளது.
தியாகி அன்னை பூபதியினுடைய வரலாறுகளை இளையோரிடையே கடத்தும் நோக்கில் அறநெறி மாணவர்களிடையே அன்னை பூபதி நினைவாக நடத்தப்பட்டிருந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வும் தியாகி அன்னை பூபதியினுடைய நினைவு நாள் நிகழ்வும் புதுயுகம் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (18-04-2026) கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு சபை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்ற இந்நினைவேந்தல் நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மாவட்ட வர்த்தகர் சங்கத்தினர் பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், மதகுருமார்கள், மலரும் புதுயுகம் அமையத்தின் உறுப்பினர்கள், அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



செய்தி - சுடரோன்
ஊர்தி பவணி
அன்னை பூபதியின் 38ஆம் ஆண்டு நினைவேந்தலை அனுஸ்டிக்கும் முகமாக எதிர்கால சந்ததிக்கு அன்னையின் தியாகத்தையும், தமிழின போராட்டத்தின் வரலாற்றையும் கடத்தும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்பட்டு வரும் அன்னை பூபதியின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்தி பவணி 10ஆம் நாளான நேற்று (18.04.2026) மட்டக்களப்பின் படுவான்கரை பிரதேசங்கள் பலவற்றிற்குக் கொண்டு செல்லப்பட்டு மக்கள் அஞ்சலிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
களுவாஞ்சிக்குடி நகரில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வூர்திப் பவணியானது வெல்லாவெளி, மண்டூர், கொக்கட்டிச்சோலை, வவுணதீவு பிரதேசங்களுக்குச் சென்று அங்கு மக்களின் அஞ்சலிக்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. அத்துடன், மக்களும் உணர்வுபூர்வமாக அன்னைக்கு அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 9ஆம் திகதி யாழ். நல்லூர் தியாகி திலீபன் நினைவிடத்தில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வூர்தி பவணி வடக்கு, கிழக்கு பகுதிகளிலுள்ள பிரதேசங்கள் அனைத்திற்கும் கொண்டு செல்லப்பட்டு இன்று அன்னை பூபதியின் நினைவிடத்தில் முடிவுறுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் உள்ளிட்ட பிரமுகர்கள் ஊர்தியுடன் பயணித்தமை குறிப்பிடத்தக்கது.








விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் அடுத்து வரப்போகும் கதைக்களம்... வீடியோவுடன் இதோ Cineulagam
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri