யாழ் போதனா வைத்தியசாலை படுகொலை நினைவேந்தல்
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், 1987 ஆம் ஆண்டு இந்திய ஆக்கிரமிப்பு படைகளால் படுகொலை செய்யப்பட்ட 75 பணியாளர்களுக்கான 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.
இன்று (21.10.2023) குறித்த நினைவேந்தல் யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் தீபன் திலீசன் தலைமையில் நடைபெற்றுள்ளது
நினைவேந்தல்
இதன் போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 1987 ஆம் ஆண்டு கடமைபுரிந்து வந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட மகனின் தயார் ஒருவர் பிரதான சுடரினை ஏற்றி வைத்ததுடன் மலரஞ்சலியினை செலுத்தினார்.
மேலும் இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிர்வாக உறுப்பினர்கள், பொதுமக்கள், படுகொலை செய்யப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.











சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri
