முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் 33 ஆவது நினைவு தினம் முன்னெடுப்பு
முன்னாள் ஜனாதிபதி மறைந்த ரணசிங்க பிரேமதாஸவின் 33 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, கொழும்பில் விசேட நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வு நேற்று காலை(01.05.2026) நடைபெற்றது.
நினைவேந்தல்
கொழும்பு, புதுக்கடை உயர் நீதிமன்றத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் திருவுருவச் சிலை வளாகத்தில் இந்த நினைவேந்தல் நடைபெற்றது.
மேலும், அங்கு அமைந்துள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு மலரஞ்சலிகள் செலுத்தப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.

அத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அவரது தாயார் ஹேமா பிரேமதாஸ உள்ளிட்ட குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நேற்று மாலை கங்காராம விகாரையில் இடம்பெற்ற தர்ம போதனை நிகழ்வைத் தொடர்ந்து, இன்று காலை அன்னாரது சிலையடியில் இந்த நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.





டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri