கால்நடைகள் தண்ணீருக்காக தவிக்கும் அவலம்
கிளிநொச்சி-புளியம் பொக்கனை கமநலபிரிவுக்குட்பட்ட தருமபுரம் பகுதியில் சிறிய குளங்களாக மூன்று குளங்கள் உள்ளன.
தற்பொழுது வறட்சியின் காரணமாக மூன்று குளங்களிலும் நீர் முற்றாக வற்றியதன் காரணமாக இப்பகுதியில் உள்ள கால்நடைகள் நாளாந்தம் தமது தண்ணீருக்காக தவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
சிறுபோக நெற்செய்கை அறுவடை
தற்பொழுது சிறுபோக நெற்செய்கை அறுவடை முடிவடைந்து நிலையில் கல்மடுகுளத்திலிருந்து ஒரு மாத காலமாக நெத்தலியாறு ஊடாக புளியம்பொக்கனை விவசாய நிலம் ஊடாக கடலுக்குள் வீணாக செல்கிறது.
இதனை சம்பந்தப்பட்ட விவசாய அமைப்புகள் அரச அதிகாரிகள் கருத்தில் கொண்டு குளத்திற்கு உடனடியாக நீரினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கால்நடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.








அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
