அனில் அம்பானியின் சொத்துக்கள் அதிரடியாக முடக்கம்
ரிலையன்ஸ் அனில் அம்பானி குழுமத்துடன் தொடர்புடைய 30.84 பில்லியன் ரூபாய் (350.87 ) சொத்துக்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.
பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்தியாவின் நிதி குற்றவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பரிவர்த்தனைகள் முடக்கம்
இந்த வழக்கு, கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் தம்பிக்குச் சொந்தமான குழுமம், 2017 மற்றும் 2019க்கு இடையில் இந்தியாவின் YES வங்கியில் இருந்து 568.86 டொலர் மில்லியனுக்கும் அதிகமாக கடன் வாங்கியது தொடர்பானது எனவும் கூறப்படுகின்றது.

இதற்கமைய, மும்பை, டெல்லி மற்றும் சென்னை முழுவதும் உள்ள குடியிருப்பு அலகுகள் மற்றும் நிலப்பிரிவுகளில் எந்தவொரு பரிவர்த்தனையும் மேற்கொள்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் தொழிலதிபர் அனில் அம்பானியின் மும்பையில் உள்ள குடும்ப வீடும் அடங்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |