இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து அங்கிலிக்கன் தேவாலயம் முறைப்பாடு
இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து அங்கிலிக்கன் தேவாலயம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முறைப்பாடு செய்துள்ளது.
இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி ஏற்றுகை அரசியல் மயப்படுத்தப்படுவதாகவும், அமைதியான போராட்டங்களை அரசாங்கம் அடக்குவதாகவும், அரசியல் மற்றும் ஏனைய நிறுவனங்களில் அரசியல் மயப்படுத்தலை அவதானிக்க முடிவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியல் சாசனத்தைத் திருத்தி அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றச்செயல்களுக்கு பொறுப்பு கூறப்படாத நிலைமை நீடித்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த அனைத்து விடயங்கள் தொடர்பிலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவை கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan