மறைந்த யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளருக்கு அங்கஜன் இரங்கல்

Jaffna Angajan Ramanathan Parliament Election 2024 Sri Lanka Parliament Election 2024
By Kajinthan Oct 23, 2024 06:28 PM GMT
Report

இனியவனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுபப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் இன்றையதினம் (23) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும், "எனது உடுப்பிட்டி தொகுதி இணைப்பாளரும், முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினரும், நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளருமான எனது அன்புச்சகோதரன் செந்திவேல் தமிழினியன் (இனியவன்) மறைவுச் செய்தியை கலங்கிய மனதுடன் ஊடகங்களுக்கு அறியத்தருகிறேன்.

அறுகம்பை விவகாரத்தின் தொடக்கப்புள்ளி! ஐக்கிய மக்கள் சக்தி தரப்பிலிருந்து விளக்கம்

அறுகம்பை விவகாரத்தின் தொடக்கப்புள்ளி! ஐக்கிய மக்கள் சக்தி தரப்பிலிருந்து விளக்கம்

பிரசார நடவடிக்கைகள்

எனது அரசியல் பயணத்திற்கு பெரும் ஆதரவுத்தளத்தை உருவாக்கி அதில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து வடமராட்சி மக்களுக்கான அபிவிருத்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என முழு ஈடுபாட்டுடன் இனியவன் செயற்பட்டு வந்தார்.

வடமராட்சியைச் சேர்ந்த அனைத்து மக்களாலும் இலகுவாக அணுகக்கூடியவராகும், மக்களின் தேவைகள் அறிந்தவராகவும் விளங்கிய அவர், நேரகாலம் பாராது மக்களுக்காகவும், மக்கள் அரசியலுக்காகவும் எம்மோடு பயணித்தவர்.

மறைந்த யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளருக்கு அங்கஜன் இரங்கல் | Angajan S Condolance To Jaffna Candidate Death

இளமைக்கேற்ற துடிப்போடு, எந்தச்சூழலிலும் அனைத்து தரப்பினரையும் அணுகி வடமராட்சி மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதில் பெரும் முனைப்போடு செயற்பட்டார்.

அவரது அர்ப்பணிப்பும், மக்கள் அவர் மீது கொண்ட விருப்புக்கும் அடையாளமாக 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னதாக வல்வெட்டித்துறை நகர சபைக்கான உறுப்பினராக அவரை நியமித்திருந்தோம்.

அப்பதவியின் ஊடாக அவர் வல்வெட்டித்துறை நகரசபைக்குட்பட்ட கிராமங்களுக்கான அபிவிருத்தி தேவைகளை தனது இயலுமைக்கமைய செவ்வனே நிறைவேற்றியிருந்தார். அவற்றின் தொடர்ச்சியாக 2019 கோவிட் பெருந்தொற்றுக்காலத்தில் இரத்த தான நிகழ்வுகள், நிவாரணங்கள் வழங்கல், சிரமதான பணிகள் என பல்வேறுபட்ட பணிகளை அங்கஜன் இளைஞர் அணியூடாக வழிப்படுத்தியிருந்தார்.

ரஸ்ய சந்திப்பில் இந்திய - சீன அரசாங்கங்கள் மேற்கொண்டுள்ள உடன்படிக்கை

ரஸ்ய சந்திப்பில் இந்திய - சீன அரசாங்கங்கள் மேற்கொண்டுள்ள உடன்படிக்கை

மக்களினது கோரிக்கை

2020 நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உடுப்பிட்டி தேர்தல் தொகுதியில் பெருவெற்றியீட்டியதில் என்னோடு இணைந்து இனியவன் ஆற்றிய களப்பணிகள் ஏராளம். அவற்றை என்றும் என்னால் மறந்துவிட முடியாது. கடந்த காலத்தில் உடுப்பிட்டி பிரதேசத்தில் 28,000க்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு பயனளிக்ககூடிய பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை நாம் பெற்றுக்கொடுத்தபோது அவற்றை அம்மக்களிடம் கொண்டுசேர்த்ததிலும், அவற்றின் தொடர்ச்சிகளை கவனிப்பதிலும் காட்டிய அக்கறை மக்களாலும் நினைவில் கொள்ளப்படும்.

மறைந்த யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளருக்கு அங்கஜன் இரங்கல் | Angajan S Condolance To Jaffna Candidate Death

அதன் தொடர்ச்சியாகவே 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவுகளில் நாம் ஈடுபட்டபோது உடுப்பிட்டித் தொகுதி மக்களினது கோரிக்கைக்கமைய செந்திவேல் தமிழினியன் வேட்பாளராக தெரிவுசெய்யப்பட்டிருந்தார். தேர்தல் பிரசார காலத்தில் ஏற்பட்ட திடீர் சுகவீனத்தால் சிகிச்சை பெற்றுவந்த அவர், இன்று 23 அதிகாலை எம்மை விட்டுப் பிரிந்துவிட்டார்.

அவரது இழப்பு எனக்கும், எனது அணியினருக்கும் மட்டுமல்லாது வடமராட்சி மக்களுக்கும் பேரிழப்பாகும். சகோதரனாக, ஊரவனாக, அன்புக்குரிய தோழனாக அவரோடு இணைந்து செயற்பட்ட அனைவரோடும் நாம் இச்சந்தர்ப்பத்தில் துணை நிற்கிறோம்.

அன்னாரின் இழப்பையடுத்து, இன்றிலிருந்து அன்னாரின் இறுதிச்சடங்குகள் நிறைவடையும் வரை வடமராட்சி பிரதேசத்திற்கான எமது அனைத்து பிரசார நடவடிக்கைகளையும் இடைநிறுத்தம் செய்வதோடு, எனது பிரசார கூட்டங்களையும் இடைநிறுத்த தீர்மானித்துள்ளேன்.

மீண்டும் இத்துயரத் தருணத்தில் நாம் அனைவரும் அன்னாரின் குடும்பத்தினர், உறவுகள், நண்பர்கள், ஆதரவாளர்கள் அனைவரோடும் துணைநிற்பதோடு, அன்னாரின் ஆத்ம சாந்திக்காக இறைவனை வேண்டுகிறோம்" என குறிப்பிட்டுள்ளார். 

இராணுவ தலைமையகத்தின் முக்கிய அறிவிப்பு

இராணுவ தலைமையகத்தின் முக்கிய அறிவிப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW   
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுவில், அளவெட்டி தெற்கு

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
14ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Allschwil, Switzerland

30 Mar, 2017
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US