இலங்கையின் பொருளாதார மீட்சியைப் பாராட்டிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு
இலங்கையின் பொருளாதார மீட்சியைப் பாராட்டிய ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என்.சந்திரபாபு நாயுடு, இலங்கையின் தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சி குறித்த நம்பிக்கையையும் வெளியிட்டுள்ளார்.
இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மஹிஷினி கொலோன்னே, விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 31ஆவது CII Partnership Summit நிகழ்வின் போது ஆந்திர முதல்வரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் போக்குவரத்துத் தொடர்பு
இதன்போது இலங்கை – இந்தியா இடையிலான வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் போக்குவரத்துத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆராயப்பட்டது.
குறிப்பாக, கொழும்பு – விசாகப்பட்டினம் இடையிலான தொடர்புகளை மேம்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், விசாகப்பட்டினத்தில் இலங்கையின் Brandix குழுமத்தினால் நிறுவப்பட்ட 1,000 ஏக்கர் பரப்பளவிலான Brandix India Apparel City தொழிற்பேட்டையை உயர்ஸ்தானிகர் பார்வையிட்டார்.
வேலைவாய்ப்பு வழங்கும் தொழிற்பேட்டை
சுமார் 20,000 இற்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் இந்த தொழிற்பேட்டையில் பெரும்பான்மையானோர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இலங்கை நிறுவனங்களின் முதலீடுகள் இந்தியாவில் வேலைவாய்ப்பு, ஏற்றுமதி மற்றும் நிலையான தொழில்துறை வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்வதாக இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
குக் வித் கோமாளி புகழ் அஷ்வினுக்கு நாளை (நவம்பர் 20) திருமணம்... பெண், பிரபல இயக்குனரின் பேத்தி... Cineulagam