தமிழரசுக்கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ள ஆனந்தசங்கரி
தமிழரசுக்கட்சியைச் சேர்ந்தவர்கள் எம்முடன் இணையுங்கள். அவ்வாறு இணைய வேண்டிய காலம் இதுவாகும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
70 வருட அரசியல் அனுபவத்துடன் நான் இருக்கின்றேன். கடந்த காலங்களில் திட்டமிட்டு பிழையான கருத்துக்கள் கூறப்பட்டு அரசியல் மோசடி செய்யப்பட்டது.
பல வசதி வாய்ப்பு
பல சந்தர்பங்களில் MP ஆவதற்கும், ஏனைய பல வசதி வாய்ப்புக்களுடன் வாழக்கூடிய வகையில் அரசாங்கங்கள் முனைந்தன.
ஆனாலும் அதற்கு நான் சாரவில்லை. கை சுத்தமான அரசியலையே செய்தேன். இன்று அரசியலில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் வாக்குகள் முக்கிய இடம் பிடித்துள்ளது.
ஒவ்வொரு விதமான கட்சிகளாகவும், பிழையாக இணைந்த கட்சிகள் பலவும் என போட்டியிடுகின்றன. நல்ல கட்சி ஒன்றை மக்களுக்கு காண்பிக்க வேண்டிய கடமை எனக்கு உள்ளது. அந்த கடமையை நான் செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
