இறுதி முடிவுகள் வெளியாகும் தருணம்! தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் விடுத்துள்ள கோரிக்கை
ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியான பின்னரும் மக்கள் அமைதியாகச் செயற்படுமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை தேர்தலின் போது அமைதியான முறையில் செயற்பட்ட மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஏனைய தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இந்த ஜனாதிபதி தேர்தலில் பாரதூரமான வன்முறைச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லையெனவும் இது திருப்திகரமாகவுள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.
வன்முறைச் சம்பவங்கள்
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று இறுதி முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இந்த முதல் சுற்றில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் உள்ளார்.
இதேவேளை இன்னும் சில மணி நேரங்களில் ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவுகளை அறிவிக்கும் நடவடிக்கையை தேர்தல் ஆணையகம் முன்னெடுத்து வருகின்றது.
இந்நிலையிலே தொடர்ந்தும் அமைதியாக செயற்பட்டு தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
