அமெரிக்க பொலிஸாரால் இந்திய வம்சாவளி ஒருவர் சுட்டுக் கொலை
அமெரிக்கா(America) - டெக்ஸாஸ்(Texas) மாநில பகுதியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் அந்நாட்டு பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவமானது, கடந்த 21ஆம் திகதியே நிகழ்ந்துள்ளதாக சர்வதேச செய்திகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் இந்திய உத்தரபிரதேஸை சேர்ந்த சச்சின் சாஹ எனப்படும் 42 வயதான நபரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
பொலிஸார் மீது தாக்குதல்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், உயிரிழந்த நபர் 51வயதான பெண் ஒருவரை கடுமையாக தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய, பொலிஸார் அவரை கைது செய்ய முயன்றுள்ளனர்.
இதன்போது, கைது செய்ய முயன்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகளை தாக்குவதற்கு முயற்சித்தபோதே, அவர் பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
அதேவேளை, அவரால் தாக்குதலுக்கு உள்ளான பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOINNOW |