தீபாவளி தினத்தன்று இலங்கை பிரபலத்திற்கு செலுத்தப்பட்ட அஞ்சலி (Video)
உலகெங்கிலும் உள்ள இந்துக்களால் பரவலாகக் கடைப்பிடிக்கப்படும் தீபத் திருநாளான தீபாவளி அன்று இலங்கையின் பொப் பாடகரும் இசையமைப்பாளருமான அந்தோனிப்பிள்ளை இம்மானுவேல் மனோகரனுக்கு எதிர்பாராத வகையில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியப் படைகளுடன், மதப் பண்டிகையைக் கொண்டாட உலகின் உயரமான போர்க்களங்களில் ஒன்றான இடத்திற்குச் சென்றுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் நரேந்திர மோடி தனது கைகளால் படையினருக்கு இனிப்புகளை ஊட்டியுள்ளார்.
பாகிஸ்தானின் எல்லைப்பகுதிக்கு மோடி விஜயம்
இதன்போது இந்திய படையினர் அனைவரும் சில வார்த்தைகளின் உச்சரிப்பு வித்தியாசமாக இருந்தாலும் கூட ஏ.இ.மனோகரனின் சுராங்கனி, சுராங்கனி, சுராங்கிட்ட மாலு கெனாவா (சுராங்கனிக்கு மீன் கொண்டு வந்தேன்) என்ற பாடலை பாடியுள்ளனர்.
8,000 அடி உயரத்தில் உள்ள பாகிஸ்தானின் எல்லைப்பகுதியான கார்கிலில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
கடந்த 1999ஆம் ஆண்டில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் கார்கிலில் பாரிய மோதல் இடம்பெற்றதை குறித்த ஊடகம் நினைவுப்படுத்தியுள்ளது.
தமிழக மக்களால் ரசிக்கப்பட்ட பாடல்
மனோகரனின் பாடல் தமிழ் வார்த்தைகளை சிங்களத்துடன் கலந்து பாடலில் அறிமுகப்படுத்திய பின்னர் பரவலாகப் பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




