2010இல் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்: 21 பேரை விடுவித்தது நீதிமன்றம்
கொழும்பில் கடந்த 2010ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் திகதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, சட்டவிரோதமாக ஒன்றுகூடியமை, பொலிஸாருக்கு காயங்களை ஏற்படுத்தியமை மற்றும் பொது சொத்துச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட 29 குற்றச்சாட்டுகளில் இருந்து முன்னாள் பல்கலைக்கழக மாணவர் செயற்பாட்டாளர்கள் 21 பேரை கொழும்பு மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
அன்றைய உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவை கொச்சைப்படுத்திய குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை பெற்ற பேராதனை பல்கலைக்கழக மாணவர் செயற்பாட்டாளர்கள் குழுவொன்றை விடுவிக்க கோரி அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம், கல்வி அமைச்சுக்கு வெளியில் இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

பொலிஸாரின் அத்துமீறிய செயல்
இதன்போது பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் அப்போதைய அழைப்பாளர் உதுல் பிரேமரத்ன உட்பட 21 பல்கலைக்கழக மாணவர்களை பொலிஸார் கைது செய்தனர்.
அத்துடன் போராட்டத்தை செய்தியாக்க வந்த பல ஊடகவியலாளர்களும் பொலிஸாரால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து மாணவர்களின் போராட்டத்தை செய்தியாக்க சென்றிருந்த ஊடகவியலாளர்கள் குழுவை தாக்கிய பொலிஸ் அதிகாரிகள் மீது உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பும் கோரிக்கை விடுத்திருந்தது.

குற்றப்பத்திரிகை தாக்கல்
இந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டவர்கள் மீது கொழும்பு மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
எனினும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய சாட்சியங்கள் இல்லாததை கருத்தில் கொண்டு, அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் அவர்களை விடுவிக்க மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த தீர்மானித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 12 மணி நேரம் முன்
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri