முதியவரொருவரின் மோசமான செயல் - பொலிஸில் முறைப்பாடு
கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புறநகர் பகுதியில் சிறுமியொருவரை வன்புணர்விற்கு உட்படுத்த முயற்சித்த முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (25.06.2023) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனது வீட்டின் வளவில் விளையாடிக் கொண்டிருந்த சுமார் 8 வயதுடைய சிறுமியை அவ்வழியால் மாடு மேய்த்து கொண்டிருந்த 64 வயது மதிக்கதக்க முதியவர் தேங்காய் பறித்து தருவதாக அழைத்து சென்று வன்புணர்விற்கு உட்படுத்த முயற்சித்துள்ளார்.
முறைப்பாடு பதிவு

இந்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் உறவினரால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் அடிப்படையில் முதியவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நீதிமன்ற நடவடிக்கைக்காக அவர் இன்றைய தினம் (26.06.2023) கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக சிறுவர் பெண்கள் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
கனியை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அந்த ’ஸ்டார்’ நடிகர்.. அட என்னப்பா நடக்குது Cineulagam
வயது உண்மை தெரிந்ததும் சரவணன் எடுத்த அதிரடி முடிவு, கதறி புலம்பும் மயிலு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam