அக்கரைப்பற்றில் பழைய இரும்பு விற்பனை கடையில் தீ விபத்து(Video)
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பாறை வீதியிலுள்ள பழைய இரும்புகள் விற்பனை மற்றும் பழைய நானாவித பொருட்களின் பாரிய களஞ்சிய சாலையொன்று இன்று(06.06.2023) தீப்பற்றி எரிந்துள்ளது.
காலை 10 மணியளவில் விற்பனை நிலையத்தில் இருந்து தீ வெளிவருவதை அவதானித்த அருகில் இருந்தவர்களும் கடையிலே வேலை பார்த்தவர்களும் உரிய தரப்பினருக்கு அறிவித்திருந்த நிலையில் உடன் விரைந்து செயற்பட்ட தீயணைப்பு பிரிவினர் உள்ளிட்டவர்களினால் அதிஷ்டவசமாக தீ கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டுள்ளது.
தீ விபத்து

அக்கரைபற்று மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர், ஆலயடிவேம்பு அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை பிரதேச சபைகளின் நீர் பவுசர்களின் உதவியைக்கொண்டு பரவிய தீ கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று அம்பாறை வீதியில் நீண்டகாலமாக இயங்கிவரும் இந்தக் களஞ்சியசாலையில் பழைய பாவனைக்குதவாத இரும்பு மற்றும் நானாவித இரும்பு வகைகள் மின்சார உபகரணங்கள் கொள்வனவு செய்து மீள்சுழர்ச்சி பாவனைக்காக வேறு இடங்களுக்கும் அனுப்பி வந்துள்ளனர்.
மக்களின் கோரிக்கை

இருப்பினும் இச்செயற்பாடு பாதுகாப்பற்ற முறையில் இடம்பெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மேலும் இது தொடர்பில் பிரதேச சபை கவனத்தில் எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெற்றுப்போத்தல்கள், மற்றும் சில மின் உபகரணங்கள் இந்த அனர்தத்தின் போது வெடித்து சிதரறியதையும் காணக்கூடியதாக இருந்துள்ளது.
அனர்த்தம் ஏற்பட்டு சில மணிநேரம் அக்கரைப்பற்று அம்பாறை வீதி ஊடான
போக்குவரத்து செயற்பாடுகளும் சற்று நேரம் தடைப்பட்டிருந்ததும்
குறிப்பிடத்தக்கது.
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan