அரச சார்பற்ற நிதியம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும்: யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்
ஓய்வு நிலை அரச அதிபர் வேதநாயகன் தலைமையில் அரச சார்பற்ற நிதியம் ஒன்று உருவாக்கப்படவேண்டுமென யாழ்.பல்கலைக்கழக கல்வியியல் துறை விரிவுரையாளர் இ.சர்வேஸ்வரா தெரிவித்துள்ளார்.
அளவையூர் தத்துவஞானி கைலாசபதி அரங்கில் இடம்பெற்ற ஓய்வுநிலை அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனின் சேவை நயப்பு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்து உரை ஆற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்.மாவட்டத்தில் அரச அதிபராகக் கடமையாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ள அளவெட்டி மண்ணின் மைந்தன் நா.வேதநாயகன் ஒரு நேர்மையான அரச அதிகாரி ஆவார்.
அந்த நேர்மையான அதிகாரியின் ஓய்வின் பின்னர் அவரது எதிர்காலம் தொடர்பில் பலராலும் பேசப்பட்டு வருகின்றது. அவர் அரசியலுக்குள் நுழையலாம் எனவும் பேசப்படுகிறது.
நேர்மையான அரச அதிகாரி அரசியல் பாதையில் சென்றால் அவரது நேர்மையைப் பாதிக்கும். எனவே அரசியல் பக்கம் செல்வதைத் தவிர்ப்பது நல்லது.
மேலும் அளவையூர் மக்கள் சார்பில் ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகின்றேன். அரசினால் செய்ய முடியாத பல திட்டங்களைப் புலம்பெயர் மக்களின் உதவியுடன் செய்ய முடியும். உதாரணமாகத் தமிழர் புனர்வாழ்வு கழகம் என்ற அமைப்பின் ஊடாக முன்னர் பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அதேபோல நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் ஒரு அரச சார்பற்ற நிதியம் ஒன்றினை உருவாக்குவதன் மூலம் வெளிநாடுகளிலிருந்து பல மில்லியன் ரூபா நிதிஉதவிகளை பெற்று அரசினால் செய்ய முடியாத பல திட்டங்களை எமது பிரதேசங்களில் முன்னெடுக்க முடியும்.
குறிப்பாக யுத்த காலத்தில் தமிழர் புனர்வாழ்வு கழகம் என்ற அமைப்பின் ஊடாக புலம்பெயர் நாட்டிலிருந்து கிடைத்த நிதி மூலம் பல்வேறுபட்ட மக்கள் நலன் சார் அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அதேபோல் யுத்த காலத்தில் கிடைத்த நிதியைப் போல ஒரு 10 வீத நிதி கிடைத்தால் இங்கே பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியும்.
எனவே எதிர்வரும் காலங்களில் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் ஒரு அரச சார்பற்ற
நிறுவனம் ஒன்றினை பதிவு செய்து அந்த நிதியத்தின் ஊடாக மக்களுக்குச் சேவையாற்ற
சமூக ஆர்வலர்கள் முன்வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri
